காட்டுமாஞ்சோலை பத்திரகாளியம்மனின் தீ மிதிப்பு

Report Print Reeron Reeron in நிகழ்வுகள்

மட்டக்களப்பு - ஏறாவூர் - 4 காட்டுமாஞ்சோலை புகழ்பெற்ற பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு சக்திப் பெருவிழாவின் இன்றைய தீ மிதிப்பு வெகு சிறப்பாக இடம்பெற்று பள்ளையப் பூசையுடன் நிறைவடைந்தது.

ஆலயத்தின் சக்திப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை (29) அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருக்கனி சுமத்தலுடன் ஆலயத் திருக்கதவு திறத்தலுடன் ஆலய பெருவிழா நடைபெற்று தீ மிதிப்புடன் நிறைவுபெற்றது.

இன்று இடம்பெற்ற தீ மிதிப்புக்கு ஆயிரக்கணக்கான சக்தியின் பக்தர்கள் வருகை தந்ததுடன் தீ மிப்பிலும் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு விசேட அபிசேகப் பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

அத்துடன் தேவாதிகளுக்கு பலிகரும பூசைகளும் இடம்பெற்றன.

அன்னையின் ஆலய அறங்காவலர் சபையினர் இன்றைய இறுதி நாள் தீமிதிப்புக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைத்து பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இன்றைய இறுதி நாள் பெருவிழாவில் காலை 8.00 மணிக்கு பூ மிதித்தல் என்னும் புண்ணிய நிகழ்வுடன் விசேட ஆராதனைகளுடன் சக்கரை அமுது , நோர்ப்பெறிதல், செவ்வட்டா ஆடல் போன்ற நிகழ்வுடன் காவியம் வாழியும் பாடி அன்னையின் சக்திப் பெருவிழா இனிதே நிறைவுபெற்றது.