30 லட்சம் ரூபா செலவில் சன சமூக நிலையம் திறந்து வைப்பு

Report Print Thirumal Thirumal in நிகழ்வுகள்

மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையம் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த சனசமூக நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது ஆலய நிர்மாண பணிக்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான சீமெந்து பக்கட்டுக்கள், மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜாதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சனசமூக நிலையத்தின் மூலம் இங்கு வாழும் சுமார் 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைய உள்ளன.