யாழ்.நல்லூரில் ஒய்யாரமாக வெளிவீதியுலா வருகின்றான் செங்கதிர்செல்வன்

Report Print Shalini in விழா

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா இன்று வெகு விமர்சையாக இடம்பெறுகின்றன.

இதன்போது செங்கதிர்செல்வன் வள்ளி தெய்வானையோடு வெளிவீதியுலா வரும் காட்சி அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசத்துக்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.