ஜனாதிபதி கலந்து கொள்ளும் யாழ்.நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிப்பார்?

Report Print Samy in விழா

யாழ்ப்பாணத்தில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால கலந்து கொள்ளும் தேசிய தமிழ் மொழித் தின விழாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் புறக்கணிப்பார் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிப்பர் என்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு வழங்காமல் இருப்பதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தெரியவருகின்றது.

அவர்களில் சிலர் நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே தொலைநகல் மூலம் அறிவித்து விட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது.