அபாய வலயத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 50,000 ரூபா

Report Print Ramya in நிதி

மீதொட்டமுல்ல அபாய வலயத்தில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூபா 50,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 14 ஆம் திகதி ஏற்பட்ட அனர்த்தத்தால் தற்போது வரையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மீதொட்டமுல்ல பகுதியில் வசிப்போரின் வீட்டுக்கு கடன் இரத்து செய்யப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments