பிணை முறிப்பத்திர விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Report Print Steephen Steephen in நிதி
advertisement

சர்ச்சைக்குரிய திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய பர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான அர்ஜூன் அலோசியஸ்யை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி கே.டி. சித்திரசிறி இன்று அறிவித்துள்ளார்.

அர்ஜூன் அலோசியஸ், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனாவார்.

விவகாரத்துடன் தொடர்புடைய நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் குறித்து மத்திய வங்கியின் மேலதிக பணிப்பாளர் வசந்த அல்விஸ் தகவல்களை வெளியிட்ட போதே ஆணைக்குழுவின் தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதியும் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வெளியிடப்பட்ட திறைசேரி பிணை முறிப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கே.டி. சித்திரசிறி, பிரசன்ன ஜயவர்தன, முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் ஆணையாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

advertisement

Comments