இலங்கைக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கும் நோர்வே

Report Print Ajith Ajith in நிதி
advertisement

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் (180 மில்லியன் ரூபா) நிதி உதவியை வழங்க உள்ளதாக நோர்வே அறிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவியை நோர்வே வழங்குவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் ப்ரென்டே அறிவித்துள்ளார்.

மேலும், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதன் முக்கியத்துவம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் அதன் பாதிப்புக்களை ஈடு செய்வதைவிட, அனர்த்த பாதிப்புக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது சாலச்சிறந்தது என்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

advertisement