பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர்

Report Print Nivetha in பிரான்ஸ்
advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதையடுத்து, மர்மநபர் வந்த காரில் இருந்து நெருப்பு மற்றும் புகை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், அந்த இடத்தை முற்றுகையிட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

குறித்த காரை ஓட்டி வந்த மர்ம நபர் இறந்த நிலையில் காரில் கிடந்துள்ளதுடன், காரில் இருந்து ரைபில், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள நகர பொலிஸார், காரை ஓட்டி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலையடுத்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


You may like this video

advertisement