ஜேர்மனியில் துப்பாக்கி தாக்குதல்! பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் - பொலிஸார் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in ஜேர்மனி

தெற்கு ஜேர்மனியின் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.

அங்கு பொலிஸார் படையினர் சுற்றி வளைத்து எதிர் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரி ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தாக்குதலை அடுத்து ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பவ இடத்தில் ஹெலிகொப்டர்கள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது

advertisement

Comments