ஜெர்மனியில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற கலைத்திறன் இறுதிப் போட்டிகள்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களாக ஜெர்மனி முழுவதிலும் மாநில மட்டத்தில் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை இப்போட்டிகளின் நிறைவு நிலைப்போட்டிகள் கடந்த 18.03.2017 கற்றிங்கன் நகரில் சிறப்பாக நடைபெற்றன.

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற நிகழ்வுகளில் 50 போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு போட்டிகளையும் மூன்று துறைசார் வல்லுனர்கள் நடுவர்களாக இருந்த போதிலும். விழாவில் கலந்துகொண்ட பல்வகையான தரப்பிலிருந்தும் ஏழுபேர்கொண்ட விசேடகணிப்புக்குழு மேலதிகமாகத் தயாரிக்கப்பட்டு இரண்டாம்நிலை நடுவமும் செய்யப்பட்டது.

இப் போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

மதுரக்குரலோன் கண்ணனின் சிறப்புரையின்போது, தமிழ்க் கல்விக் கழகத்தின் இப்புதிய முயற்சியைப் பாராட்டியதுடன் இந்நிகழ்வு ஒரு இறுதிப்போட்டியல்ல இன்னும் பல ஆண்டுகள் வளரும் போட்டியென்று வாழ்த்தினார்.

இறுதிப் போட்டிகளில் முதல் மூன்று நிலைகளை அடைந்துள்ள போட்டியாளர்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 ஆவது அகவை நிறைவு விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

விழாவில் பல சிறப்பு விருந்தினர்களுடன் இசைத்துறையில் பல்வகையான பட்டங்களுக்கு உரித்தாளியான S கண்ணன் மற்றும் தேவகுருபரன் ஆகியோர் தமது குடும்பத்தினருடன் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

Comments