யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் 60 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Shalini in வரலாறு

யாழ். மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையில் தொண்டைமானாற்றங் கரையில் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்திற்கு ஆற்றங்கரையான், சின்னக் கதிர்காமம், செல்லக் கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்கள் காணப்படுகின்றன.

இந்த ஆலயம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை காட்டும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

திராவிடக் கட்டடக்கலை வடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தின் முன் தோற்றம், திருவிழாக் காலங்களின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் இங்கு காணப்படுகின்றன.

மேலும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் பால் குடம் எடுக்கும் பெண்கள், காவடி எடுக்கும் ஆடவர்கள், தீ மிதிக்கும் முதியவர்கள் என குறித்த புகைப்படங்கள் காணப்படுகின்றன.