பிரதான செய்திகள்
சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை
[ 2009-11-20 20:39:05 ] []
சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜனநாயகத்திற்காக போராடப் போவதாக சரத் பொன்சேகா படையினருக்கு அறிவித்துள்ளார்
[ 2009-11-20 16:38:16 ]
தாம் ஜனநாயகத்திற்காக போராடப் போவதாக முன்னாள் கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்த கருத்தை அவர் இன்று வெளியிட்டுள்ளார். [மேலும்]
பிந்திய செய்திகள்
தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பில் நிகழ்த்த இருந்த பாரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாம் - சிறீலங்காக் காவல்துறை
[ 2009-11-20 22:20:34 ]
தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பில் நிகழ்த்த இருந்த பாரிய தாக்குதல் ஒன்றை தாம் முறியடித்துள்ளதாகவும் அவ் தாக்குதல் திட்டம் பற்றிய தகவல்களை வெளிக் கொண்டுவந்துள்ளதாகவும் சிறீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. [மேலும்]
புவியியல் 1 ல் பிழையான வினா - புள்ளித்திட்டத்தில் தவறான விடை: பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களும் பாராமுகமாக இருக்கும் பொறுப்புடையோரும்
[ 2009-11-20 17:24:17 ]
கடந்த 27.08.2009 ல் நடாத்தப்பட்ட க.பொ.த(உ.த) தேர்வின் போது புவியியல் 1 வினாத்தாளில் இடம்பெற்றிருந்த பிழையான வினா தொடர்பாகவும் அவ்வினாவுக்காக விடைத் தயாரிப்பாளர்களால் புள்ளிவழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்டிருந்த தவறான விடை தொடர்பாகவும் உங்கள் அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். [மேலும்]
செய்திகள்
இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களிடையே சுவிட்ஸர்லாந்தில் கூட்டம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:08.53 PM ]
இலங்கையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி இணக்கப்பாடு காண்பதற்காக இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் கூடியுள்ளனர். [மேலும்]
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் இன்னும் சில மணித்தியாலங்களில்....
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:20.46 PM ]
ஜனாதிபதித் தேர்தல்; தொடர்பிலான அறிவித்தல், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் அறிவிக்கப்பட உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகாவிற்கு உயிராபத்து என்ற செய்தி தொடர்பில் விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:17.45 PM ]
முன்னாள் கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில்  எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
நிசாந்த முதுஹெட்டிகம பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:10.17 PM ]
தென் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை பிணையில் செல்ல காலி நீதவான நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. [மேலும்]
பசில் ராஜபக்ச நாளையதினம் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கவுள்ளார்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:06.25 PM ]
வடக்கிற்கு நாளை விஜயம் செய்யும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வரப்பிரசாதம் மிக்க அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கை சிறையில் உள்ள இந்திய கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது: எஸ். எம். கிருஸ்ணா
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:25.15 AM ]
இலங்கை சிறைகளில் இருந்து சுமார் 40க்கும் அதிகமான இந்திய கைதிகளை மீட்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் 2010 நடுப்பகுதி வரையில் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:20.17 AM ]
இலங்கைக்கு எதிர்வரும் 2010ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஓசியானிக் வைக்கிங் பெண்கள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:15.48 AM ]
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு எதிராக, பெண்களையும், சிறுவர்களையும் நடமாட முடியாதபடி தற்காலிக தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த பெண்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
மீள்குடியேற்றலில் ஐக்கிய நாடுகளின் இலக்கு நிறைவேறவில்லை: ஜோன் ஹோம்ஸ்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:07.51 AM ]
வடக்கில் மீள் குடியேற்றம் முன்னெடுக்கப்படுகின்ற போதும், ஐக்கிய நாடுகள்சபையின் பிரதான இலக்கு இன்னும் நிறைவேறவில்லை என ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகாவின் எழுத்துமூல பதிலை எதிர்ப்பார்ப்பதாக மனோ கணேசன் தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:02.52 AM ]
தாம் எழுப்பிய கேள்விகள் தொடர்பில் சரத் பொன்சேகா எழுத்து மூலமான பதில்களை வழங்கும் வரையில், இது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ள போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல்; மத்திய மாகாண சபை பாடசாலைகள் மூடுவிழா:இவ்விடயம் மத்திய அரசாங்கத்திற்கு தெரியாதாம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:49.19 AM ]
பன்றிக் காய்ச்சல் பரவக் கூடும் என்ற அச்சம் காரணமாக மத்திய மாகாண சபையின் பாடசாலைகளை கால வரையறையின்றி மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மூடப்படும் விடயம் தமது அமைச்சுக்கு தெரியாது என மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார் [மேலும்]
அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது: ஊடக அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:45.48 AM ]
அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். [மேலும்]
ஊனமுற்ற படைவீரர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:42.05 AM ]
கொழும்பில், ஊனமுற்ற படைவீரா ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்]
எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதனை இன்னமும் தீர்மானிக்கவில்லை: அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:38.32 AM ]
எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென என்பதனை இன்னமும் தாம் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.  [மேலும்]
சரத் பொன்சேகாவின் மனைவியும் பதவி விலகினார்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:34.31 AM ]
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்