செய்திகள்
[ Sunday, 21-12-2014 06:50:13 ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த தரப்பும் தமது உச்சப்பட்ச ஆதரவை வழங்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-12-2014 06:45:09 ]
திருகோணமலை மாவட்டம் மூதூர் மற்றும் உப்புவெளி பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
[ Sunday, 21-12-2014 06:41:15 ]
காணாமற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு ழு­வுக்கு, வெளியிலிருந்து ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக, ஜப்­பா­னிய நிபுணர் ஒரு­ வரை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச நிய­மித்­துள்ளார்.
[ Sunday, 21-12-2014 06:37:06 ]
நாட்டில் அமுலில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்து இழிவான அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-12-2014 06:35:41 ]
தபால் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள பொலிஸாருக்கு விசேட தினமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 21-12-2014 06:09:49 ]
முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க இன்னும் சில தினங்களில் முக்கியமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Sunday, 21-12-2014 05:52:46 ] []
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை இன்று தற்காலிகமாக குறைவடையலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
[ Sunday, 21-12-2014 04:54:16 ]
அனுராதபுரத்தில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளால் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்களுக்கு கைபேசிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
(2ம் இணைப்பு)
[ Sunday, 21-12-2014 04:18:44 ]
கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத கட் அவுட்களை உடனடியாக அகற்றுமாறு கண்டி மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 21-12-2014 04:11:23 ]
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்லும் போது அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் விசேட அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 21-12-2014 04:03:59 ]
மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-12-2014 03:52:42 ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது மொத்தமுள்ள 1115 வாக்கு எண்ணும் நிலையங்களில் 300 நிலையங்களுக்கு மாத்திரமே கண்காணிப்பாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
[ Sunday, 21-12-2014 03:36:44 ]
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 15000 கடிதங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக கடமையாற்றிய நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 21-12-2014 03:14:00 ]
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சொன்னாலும் பெருந்தேட்ட மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இம்முறை வாக்களிக்க மாட்டார்கள் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-12-2014 03:06:02 ]
ஆளும் கட்சியின் பலர் கடும் அதிருப்தியுடன் இருக்கின்றார்கள் என அண்மையில் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.