ஜெயலலிதாவின் சமாதிக்கு எழுந்த புதிய சிக்கல்: நீதிமன்றத் தீர்ப்பால் திடீர் சர்ச்சை

Report Print S.P. Thas S.P. Thas in இந்தியா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் திகதி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்திருந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவந்திருந்தனர். எனினும், நேற்று முந்தினம் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது.

அதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததனால் அவரை குறித்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், இன்றைய தினம் மக்கள் அதிகார அமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கையில், ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற கோரிக்கை விடத்துள்ளனர்.

இதேவேளை, மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிமினல் குற்றவாளியை அரசு மரியாதையோடு மெரினாவில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஒரு வாரத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதிகாரம் போராடும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

You may like this video

Comments