அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர்! உதவி செய்தால் 10 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசாக அறிவிப்பு

Report Print Shalini in இந்தியா

இந்தியர் ஒருவரை அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க காவல்துறை அமைப்பான பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அறிவித்துள்ளது.

குறித்த இந்தியரை கைது செய்ய உதவி செய்தால் 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று எப்.பி.ஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உணவு விடுதியின் சமையல் அறைக்குள் வைத்து இந்தியர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்திருந்தார்.

26 வயதான பத்ரேஷ் குமார் சேட்டன்பாய் படேல் என்ற இளைஞர் தனது மனைவியான பாலக் பத்ரேஷ்குமார் படேலை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ள பத்ரேஷ் குமாரை கடந்த 2 வருடங்களாக அமெரிக்க காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், பத்ரேஷ் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் அவரை கைது செய்ய உதவினால் 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 64 இலட்சம்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments