திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீனா! இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்

Report Print Murali Murali in இந்தியா

அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் சீன இராணுவத்தினர் திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, பூட்டான், மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் டோக்லாம் என்ற இடம் அமைந்துள்ளது. அந்த பகுதியை நோக்கி சீனா நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அருணாசல பிரதேசம் எல்லைக்கு அண்மித்த பகுதியில் சீனா நாட்டு படையினர் திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 11 மணி நேரம் நீடித்த இந்த போர் பயிற்சி ஒத்திகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இதன் போது விமானத்தை சுட்டு வீழ்த்தும் பயிற்சிகளை சீனா மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், சீனாவின் இந்த திடீர் நடவடிக்கை இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.