கருணாநிதியின் உடலை புதைப்பதில் எழுந்துள்ள சிக்கல்! முடிவின்றி தடுமாறும் தலைவர்கள்

Report Print Jeslin Jeslin in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காவேரி மருத்துவமனையில் இன்று மாலை காலமானதாக காவேரி மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்புறம் அவர் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அங்கு இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போதே திமுக தொண்டர்கள் அதிக அளவில் கூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கருணாநிதியின் குடும்பத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக எம்.பி கனிமொழி, துரைமுருகன், ஐ பெரியசாமி, முரசொலி செல்வம், ஆ ராசா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பிற்பகல் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் சென்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதனை கேட்டுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க சட்டம் அனுமதிக்கிறதா என ஆலோசித்து கூறுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.