இலங்கை அரசியல் பல மாற்றங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒட்டுமொத்த அரசியலும் மாற்றம் அடையுமா? தற்போது இந்தியா இலங்கையை எவ்வாறு பார்க்கின்றது? பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
த.தே.கூட்டமைப்பினர் தென்னிலங்கையுடன் இணைந்து போகின்ற நிலையை இந்தியா விரும்புகின்றதா?
கடந்த வருடம் மஹிந்த தரப்பினரால் பிரபாகரனின் பெயர் பெரிதாக பேசப்பட்டது. அதே போன்று மீண்டும் அவ்வாறான கதைகள் வெளிவருகின்றன.
இதற்கான காரணம் என்ன? என்பது பற்றியும் லங்காசிறியின் வட்டமேசையில் இலங்கையில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளரும் சிரேஸ்ட சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் இணைந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.