ஐ.நா பிரதிநிதியின் விஜயத்தன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! திட்டமிட்ட செயற்பாடா?

Report Print Kalkinn in நேர்காணல்

உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் உத்தரவாதம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பெப்லோ டி கீரிப், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபடுகின்ற தருணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையானது, திட்டமிட்ட செயற்பாடு அல்லவென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

லங்காசிறியுடனான செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு தீர்வு வழங்கக் கோரியே தாம் வட மாகாணத்தில் நாளை மறுதினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.