அரசியல் கைதிகள் விவகாரம்! மனோ கணேசனின் தற்போதைய நிலைப்பாடு

Report Print Kalkinn in நேர்காணல்

அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தான் பூரண ஆதரவை வழங்குவதாக தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

லங்காசிறியுடனான செவ்வியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா விசேட பிரதிநிதியிடம், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தான் விளக்கமளிக்க உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.