மஹா வம்சத்தின் புதிய பதிப்பு ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது

Report Print Kamel Kamel in வாழ்க்கை முறை

மஹா வம்சத்தின் புதிய பதிப்பு ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்ஜ் டெர்னரினால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட மஹாவம்ச பிரதியே இவ்வாறு நாளை வெளியிடப்படவுள்ளது.

மத்திய கலாச்சார நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

காலி கோட்டை துறைமுக அதிகாரசபையின் சுற்றுலா பங்களாவில் நாளை மாலை 5.00 மணிக்கு நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய மஹாவம்ச நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.

இலங்கையின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆய்வு நூலாக மஹாவம்சம் கூறப்படுகின்றது.

மஹானாம தேரரினால் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் ஜோர்ஜ் டெர்னரினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

24 நூற்றாண்டு வரலாற்று விடயங்கள் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையை ஆண்ட மன்னர்கள் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாவம்ச நூலின் உள்ளடக்கம் தொடர்பிலும் வரலாற்று விடயங்கள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments