வவுனியாவில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் விஷமிகளால் தீக்கிரை

Report Print Thileepan Thileepan in வாழ்க்கை முறை

வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ள தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டு வளவுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மோட்டர் சைக்கிளை தீ வைத்து எரியூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி எரிந்து வெடித்த சத்தம் கேட்டு எழுந்த வீட்டுக்காரர் மற்றும் அயல் வீட்டுக்காரார் தீயைக் கட்டுப்படுத்தமுயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இது தொடர்பில் ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments