மதவாச்சியில் வாகன விபத்து: ஒருவர் பலி

Report Print Theesan in வாழ்க்கை முறை

மதவாச்சி - பூனாவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரிசி மூடைகளை ஏற்றி பட்டா ரக வாகனமொன்று, மதவாச்சி பூனாவை பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இவ் விபத்தின் போது, பட்டா ரக வாகனக சாரதியான கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement

Comments