மகிந்த வழங்கிய 2000 ரூபாய் பணத்தை மைத்திரி அரசு திரும்ப பெறுகிறது!

Report Print Kumar in வாழ்க்கை முறை
advertisement

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2000 ரூபாய் பணத்தை மைத்திரி அரசு திரும்ப பெற்று வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சமுர்த்தி உதவி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சித்திரை கொண்டாட்டத்திற்கு 500 ரூபாயும் மகிந்த ராஜபக்ச அரசு வழங்கிய 2000 ரூபாயும் என 2500 ரூபாய் பணம் அறவிடப்படுவதாக சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தங்களுக்கு வழங்கி பணத்தை மைத்திரியின் நல்லாட்சி அரசு பறித்தெடுக்கின்றது. இது தான் நல்லாட்சி அரசின் உதவி திட்டமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே இவ்வாறு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிடம் பணம் மீள பெறப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement

Comments