பாம்புக்கடிக்கு இலக்காகிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

Report Print Theesan in வாழ்க்கை முறை
advertisement

வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (19) கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன்ட் ஒருவரை (வயது 42) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்தும் அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement

Comments