மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்டிய 120 குடும்பங்கள் வெளியேற்றம்

Report Print Kamel Kamel in வாழ்க்கை முறை

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்டிய 120 குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர இந்த தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அவர் மேலும் கூறுகையில்,

கட்டடவியல் ஆய்வு நிறுவனத்தினால் ஆபத்தான வலயம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்த குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

குப்பைமேடு சரிவினால் இடம்பெயர்ந்த சுமார் ஆயிரம் பேர் வரையில் கொலன்னாவ டெரன்ஸ் சில்வா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தம் காரணமாக 80 வீடுகள் முழு அளவிலும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலன்னாவ சுலமுல்ல பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு வீடுகள் வழங்குவது குறித்து நேற்று மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அழிவடைந்த சில வீடுகளின் உரிமையாளர்கள் அனர்த்தம் ஏற்பட முன்னதாகவே நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டு அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவ்வாறானவர்களையும் அடையாளம் காண வேண்டியுள்ளது என மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.

advertisement

Comments