பதுளை சென்ற தொடருந்தில் பயணித்த நபர் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in வாழ்க்கை முறை

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர அஞ்சல் தொடருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற அட்டை ஒன்றும் இறந்தவரிடம் இருந்ததாகவும் 68 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த தொடருந்து பதுளை தொடருந்து நிலையத்திற்கு இன்று காலை சென்றடைந்த போது, தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் விழுந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸார் நபரை தூக்கிச் சென்று பதுளை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். எனினும் முன்னரே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Comments