கொழும்பு வெள்ளவத்தையில் பாரிய அனர்த்தம்! 20 பேர் காயம்.. 10 பேரின் நிலை கவலைக்கிடம்

Report Print Samy in வாழ்க்கை முறை

வெள்ளவத்தை, சவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் தேசிய மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

20 பேர் காயம்.. 10 பேரின் நிலை கவலைக்கிடம்

வெள்ளவத்தையில் ஆறு மாடி திருமண மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 10 போின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தொிவிக்கப்படுகிறது. மூன்று பேர் வரை காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

மேற்படி கட்டடமானது தொடர்ந்து சாிந்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு கருதி அக்கட்டிடத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பகுதியில் தீயணைப்பு படை வீரர்கள், இராணுவத்தினர் ஆகியோர் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக தொிவிக்கப்படுகிறது.

மேற்படி திருமண மண்டபத்தின் வாகன நிறுத்த பகுதியியே இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

முழுமையான தகவல் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments