இலங்கை தமிழ் அகதிகள் குறித்து அவுஸ்திரேலியா புதிய திட்டம்

Report Print Ajith Ajith in வாழ்க்கை முறை

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியும் என்று அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அவுஸ்திரேலியா உதவியளிக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் ஆணையாளர் ரோமன் க்வாட்லிக் நேற்று தமிழகத்தின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்தபோது இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அந்த அதிகாரி,

அவுஸ்திரேலியாவுக்குள் இலங்கை அகதிகள் வருவதை குறைப்பதே தமது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்

எனவே இதன்நிமித்தம் தமிழக அரசாங்கம், ஐஓஎம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட அவுஸ்திரேலியா அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழக அரசாங்கம் உடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments