இளம் ஆசிரியை மரணத்தில் உயிர் வாழும் இருவர்!

Report Print Vethu Vethu in வாழ்க்கை

கடந்த சில நாட்களாக மூளை நரம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிய ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

தும்மலசூரிய, கட்டிமஹன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சுரித் திலங்கா பெர்ணான்டோ என்ற ஆசிரியை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரின் மரணத்தின் மூலம் மேலும் இருவர் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இந்த சாதனையை குளியாப்பிட்டிய வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்துள்ள ஆசிரியையின் தாயார் மற்றும் கணவரின் அனுமதியுடன் அவரது சிறுநீரகங்கள் இருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவியுள்ளது.

சிலாபம் - முந்தலம சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் இந்த ஆசிரியை இரண்டரை வயது குழந்தையின் தாயாராகும்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இந்த ஆசிரியை திருமணம் முடித்துள்ளார். மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த அவருக்கு எவ்வித விசேட நோய் தன்மையும் காணப்படவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

பகல் உணவின் பின்னர் தட்டை கழுவ சென்ற சந்தர்ப்பத்தில் வாந்தி எடுத்தவாறு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதும், அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது மூளையில் உள்ள நரம்பு பல இடங்களில் வெடித்து இரத்த போக்கு ஏற்பட்டுள்ள விடயம் அப்போதே தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவரது உயிர் இயந்திரத்தின் உதவியுடன் இயங்கியுள்ளது.

அவரை காப்பாற்ற முடியாதென்பதனை வைத்தியர்கள் அறிந்தவுடன் அவரது சிறுநீரகங்களை வேறு இருவருக்கு பொருத்தும் யோசனையை வழங்கினார்கள்.

அவரது உயிர் பிரிந்த போதிலும் அவரால் இருவர் உயிருடன் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் என உயிரிழந்த ஆசிரியை கணவர் தெரிவித்துள்ளார்.