டெங்குவை விட ஒரு வித காய்ச்சல் பரவி வருகிறது! சுகாதார திணைக்களம் கவனம் எடுக்குமா?

Report Print V.T.Sahadevarajah in மருத்துவம்

கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக டெங்குக் காய்ச்சலை விட ஒருவித காய்ச்சல் நோய் திவீரமாகப் பரவி வருகின்றது. இதனை இன்புளுவன்சா வைரஸ் நோய் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தொடர்பாக பரவலாக அறியப்பட்டிருக்காவிடினும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இந்நோயின் தாக்கம் வெகுவாக உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது அண்மையான ஒருமாதகாலமாக புதிய ஒரு நோய் பரவி வருகின்றது. இந் நோயானது இன்புளுவன்ஸா வைரஸால் ஏற்படுகின்றது.

இதனால் சராசரியாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் நுற்றுக்கணக்கானோர் வரையில் சிகிச்சைக்காக வருகை தரும் நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை ஆயிர மாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நோயின் தாக்கமானது வித்தியாசமானதாக உள்ளது. குறிப்பாக இந்நோயின் அறிகுறியாக தொடர்ச்சியான காச்சல், உடல் வலி, சளி தும்மல் காணப்படல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

குறிப்பாக இந்நோயின் அறிகுறியும், டெங்கு நோயின் அறிகுறியும் ஒரேமாதிரியாக இருப்பதால் மக்கள் இந்நோயை டெங்கு நோயாக தவறாக நினைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஒருவருக்கு இந்நோய் காணப்படும் போது அவரதுதும் மலாலேயே இந்நோயாய் மற்றையவர்களுக்கு தொற்றுகின்றது.

அதாவது ஒருவர் மற்றவருக்கு எதிராகதும்மும் போது அவரதும் மலில் இருந்து மற்றவருக்கு சிந்தும் சளியால் இந்நோய் பரவுகின்றது.

இந்நோயானது குழுந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களில் சலரோக நோயாளர்கள், கர்பவதிகள் அஸ்மா நோயாளிகள், போன்றவர்களை அதிகம் தாக்குகின்றது.

இந்நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர்ராகாரம், நீர்சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியதுடன் வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு அவர்களின் நோயின் தாக்க அளவை பொறுத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இந்நோயினை தவிர்க்க வேண்டுமாயின் தற்போதைய சூழ்நிலையில் அதிகளவான சன நெருக்கம் நிறைந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் சுவாசம் தொடர்பான நோயாததால் அதிகளவான மக்கள் நெரிசலான இடத்தில் இந்நோய் பரவுவது இலகுவானதாக இருக்கும்.

மேலும் ஒருவர் தும்மும் போதுமற்றறையவருக்கு எதிரேதும்மாது இருக்கவேண்டும். இந் நோயின் கிருமியானது சுமார் ஒரு மீற்றர்வரை தொற்றிக்கொள்ளும் தன்மையுடையதாகும்.

அத்துடன் ஒருவர்தும்மும் போதுகைக்குட்டைகளை பயன்படுத்துவதுடன் சளி ஏற்படும் போது அதற்காக பயன்படுத்தப்படும் துண்டுகளை பின்னர் தீயிட்டு எரிக்கவேண்டும்.

இதேபோன்று கைகளை நன்கு சுத்தமான நீரில் சவர்காரம் இட்டு கழுவிய பின்னரே எந்தவிதமான வேலைகளையும் செய்யவேண்டும்.

இவற்றினூடாகவே இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவற்றைவிட இந்நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக அருகில் உள்ளவைத்தியசாலைகளுக்கு சென்றுவைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments