வெளிநாடொன்றில் இலங்கையரின் பரிதாப நிலை! மற்றொருவரின் மனிதாபிமானம்

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

குவைத்தில் பணியாற்ற சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் பணியாற்றிய நிலையில் வீதியில் மயங்கி விழுந்த இலங்கையரை, மற்றுமொரு இலங்கையரான மொஹட் சப்ரான் என்பவர் காப்பாற்றியுள்ளார்.

அந்த இளைஞர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்ற சப்ரான் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மயங்கி விழுந்த இளைஞரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு தகவல்களுக்கு அமைய அவரது பெயர் பிரதிப் நுவன் எனவும் அவர் அனுராபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குவைத் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பிரதிப் நுவனை அடையாளம் காண சப்ரான் இலங்கையர்களின் உதவியை நாடியுள்ளார்.

பிரதிப் நுவன் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள், சப்ரானுக்கு தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்டு மேலதிக தகவலை பெற்றுக் கொள்ள முடியும்.