கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியாலினை மாற்றத் தடை!

Report Print Vethu Vethu in பணம்
advertisement

கட்டாரில் இருந்து இலங்கை வருவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார் ரியாலை, இலங்கை ரூபாய்க்கு மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

விமான நிலையத்தில் உள்ள வங்கி கிளையினால் கட்டார் ரியால் மாற்றுவதற்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்காமையினால் தாம் கடுமையான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அறிவிக்கும் வரை கட்டார் ரியால் மாற்ற வேண்டாம் என மத்திய வங்கியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கட்டார் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவை 6 மத்திய கிழக்கு நாடுகள் நிறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்கவில் கட்டார் ரியாலினை மாற்றத் தடை? மத்திய வங்கி மறுப்பு!

advertisement