செய்திகள்
[ Wednesday, 01-10-2014 07:16:39 ]
நாட்டில் தற்போது குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Wednesday, 01-10-2014 07:06:54 ] []
இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.
[ Wednesday, 01-10-2014 07:05:00 ]
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அரசாங்கம் மீறி வருவதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 01-10-2014 06:57:00 ]
அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, சேதமடைந்த வீடுகளில் 131 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
[ Wednesday, 01-10-2014 06:45:05 ]
ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்க்கட்சியை உடனடியாக தயார்படுத்துவதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபை கூடவுள்ளது.
[ Wednesday, 01-10-2014 06:41:02 ]
அடுத்த ஜனாதிபதி தேர்தல் நீதியானதும் நியாயமானதாக இடம்பெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 01-10-2014 06:35:23 ]
பிரிட்டனுக்கான தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீது தாக்குதல் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவை ஜனாதிபதி ஓங்கி அறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 01-10-2014 06:30:29 ] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள புளியங்கண்டலடி கிராமத்திலிருந்து தனது மகள் காணாமல் போயுள்ளதாக யுவதியின் தாய் வாகரைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யுவதியின் தாய் புதன்கிழமை  தெரிவித்தார்.
[ Wednesday, 01-10-2014 06:24:01 ]
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 01-10-2014 06:22:31 ]
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.
[ Wednesday, 01-10-2014 06:00:56 ]
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவரினால் சிங்கள தொலைக்காட்சி நடிகையொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-10-2014 05:59:06 ]
சிறைச்சாலை வசதிகளை பார்வையிடும் நோக்கில் மஹர சிறைக்குச் செல்லும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-10-2014 05:55:40 ]
சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதுடன், சர்வதேச முதியோர் தினமும் இன்று கொண்டாடப்படுகின்றது.
[ Wednesday, 01-10-2014 05:07:04 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் பிரயாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 01-10-2014 04:52:20 ]
ஜப்பான் சென்றிருந்த இலங்கை விளையாட்டு வீரர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 29-09-2014 12:22:24 ] []
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.