செய்திகள்
[ Friday, 15-08-2014 03:42:36 ] []
அவுஸ்திரேலிய சுங்க கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த 157 இலங்கை அகதிகள் மத்தியில் இருந்த சிறுவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 15-08-2014 03:39:28 ]
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளமை பிக்கு எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
[ Friday, 15-08-2014 03:15:27 ] []
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்க் அமைப்பின் புதிய செயலாளர் அர்ஜூன் பஹதூர் தாபா (Arjun B. Thapa) இலங்கையின் வெளியுறவு அமைச்சரை நேற்று மாலை சந்தித்துள்ளார்.
[ Friday, 15-08-2014 03:10:44 ] []
இலங்கை- இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான 4வது சந்திப்பில் பயிற்சி மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் உட்பட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
[ Friday, 15-08-2014 02:58:38 ]
மருத்துவர் ஒருவர் மரணமான சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பம்பலப்பிட்டி அழகு நிலையத்துக்கு தனியார் சுகாதார சேவை ஒழுங்கமைப்பு சபையே அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்க மருத்துவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
[ Friday, 15-08-2014 02:52:36 ]
உடலின் எடையை குறைப்பதற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது என பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் துலிப் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Friday, 15-08-2014 02:43:24 ] []
வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் முழு அளவில் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 15-08-2014 02:19:04 ] []
செஞ்சோலைப் படுகொலை இடம்பெற்று 8 ஆண்டுகள் கடந்து சென்றாலும் நெஞ்சில் நீங்காத நினைவோடு, அச்செல்வங்களை வணங்கி அவர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி, பேர்லின் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று நடைபெற்றது.
[ Friday, 15-08-2014 01:02:41 ] []
வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் அவர்களின் வாகனம் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
[ Friday, 15-08-2014 00:40:57 ] []
யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Friday, 15-08-2014 00:23:21 ]
பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் செய்த ஓரே நாடு இலங்கையாகும் என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 14-08-2014 23:54:09 ]
அரசாங்கத்தை பாதுகாக்கக் கூடியவர்களிடமிருந்தே ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
[ Thursday, 14-08-2014 23:23:24 ]
19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[ Thursday, 14-08-2014 16:40:00 ]
இலங்கையில் யுத்தகால ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பான கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை தயாராகி விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
[ Thursday, 14-08-2014 16:33:18 ]
இலங்கையில் இருந்து பாகிஸ்தானிய அகதிகளை திருப்பியனுப்பிய செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் நியாயம் கற்பித்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.