செய்திகள்
[ Monday, 02-03-2015 08:09:07 ]
மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை குற்றம் சுமத்தியுள்ளது.
[ Monday, 02-03-2015 08:01:40 ]
அம்பாறை மாவட்டத்தில் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
[ Monday, 02-03-2015 07:50:55 ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டம் தோல்வியடைந்தால், மக்கள் ஐக்கிய முன்னணியின் மாட்டு வண்டி சக்கர சின்னத்தில் அவரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 02-03-2015 07:35:57 ]
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 6 என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
[ Monday, 02-03-2015 07:31:19 ]
ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் 28ஆவது கூட்டம் இன்று ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்படவிருந்த அறிக்கை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[ Monday, 02-03-2015 06:34:24 ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நவீன தொழிநுட்பத்துடனான செய்மதி உபகரணங்களுடன் யாத்திரீகர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 02-03-2015 06:31:27 ]
ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
[ Monday, 02-03-2015 06:25:01 ]
எதிர்வரும் சிங்கள புதுவருடத்திற்காக மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள் வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Monday, 02-03-2015 06:21:27 ]
மட்டக்களப்பு கிரான் தொப்பிகல இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் நேற்று கடமையில் இருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Monday, 02-03-2015 06:21:02 ]
இந்தியா, சீனாவைவிட எமது வளங்கள் முக்கியம் வாய்ந்தவை என்பதால் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் யாழிற்கு சென்று என்ன பேசப்போகின்றார் என்பது குறித்து ஆராய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015 05:58:33 ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என தான் முன்னரே அறிந்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் எதிராகவே காணப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015 05:47:52 ]
கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிகளில் அப்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Monday, 02-03-2015 05:28:28 ] []
தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது என தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
[ Monday, 02-03-2015 05:13:24 ]
பொலிஸ் அதிகாரிகள் மீது முட்டை தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Monday, 02-03-2015 04:59:03 ]
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை, லோயினோன் லின்போல்ட் தோட்டத்தில் விறகு சேகரிப்பதற்காக காட்டுக்குச் சென்ற பெண் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 02-03-2015 20:29:38 ]
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது.