செய்திகள்
[ Friday, 17-04-2015 14:10:41 ]
19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
[ Friday, 17-04-2015 14:06:31 ]
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மூன்று மாத காலத்திற்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 17-04-2015 13:45:03 ]
மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் அதிகாரம் வந்தால் அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் என மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
[ Friday, 17-04-2015 13:32:47 ]
இன்று நடைபெறவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் திகதி அறிவிப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
[ Friday, 17-04-2015 13:27:24 ]
இலங்கையின் இனப்பிரச்சினைகளில் இந்தியாவோ அல்லது தமிழர்களை திருப்திபடுத்த நினைக்கும் மேற்கத்திய நாடுகளோ தகுதியற்றவைகள் என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 17-04-2015 13:14:21 ]
இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.
[ Friday, 17-04-2015 12:05:28 ] []
முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, து.ரவிகரன், மேரிகமலா ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் பாண்ட் வாத்திய கருவிகள், நூலகத்திற்கான புத்தகங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.  
[ Friday, 17-04-2015 12:00:21 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகனுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
[ Friday, 17-04-2015 11:19:32 ]
தற்போதைய அரசின் 100 நாள் திட்டத்தில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதாக கூறப்பட்ட போதிலும் மலையக மக்களின் பிரச்சினைகளில் எந்த விதமான முன்னேற்றமும் இடம்பெற்றுள்ளதாக கூற முடியாது.
[ Friday, 17-04-2015 11:11:17 ]
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்குமான அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Friday, 17-04-2015 10:53:42 ] []
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தடுக்காவிட்டால், தமிழ் மக்களால் மீண்டும் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.க.யின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 17-04-2015 10:20:34 ]
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நிர்வாக சபையின் 25 ஆவது அமர்வு இன்று கென்யா, நைரேபி நகரில் நடைபெறுகின்றது. இதில் இலங்கை சார்பில் நான்கு பேர் கொண்ட குழு பங்கு கொள்கின்றது.
[ Friday, 17-04-2015 10:06:16 ] []
மஸ்கெலியா, கெனியன் நீர்த்தேக்கத்திற்கு அருகில் லக்சபான ஆற்றிலிருந்து யுவதியின் சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
[ Friday, 17-04-2015 09:19:52 ]
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து மேலும் ஐவர் பதவி விலகியதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
[ Friday, 17-04-2015 09:18:36 ]
புத்தாண்டு காலப் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் நடவடிக்கையின் போது 1347 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 18-04-2015 06:30:21 ]
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம் சுமத்தியுள்ளார்.