செய்திகள்
[ Thursday, 18-12-2014 08:42:02 ]
எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியுடன் கட்டாயம் சேவையில் இருந்து ஓய்வுபெற வேண்டிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு மீண்டும் 6 மாத சேவை நீடிப்பை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பரிந்துரைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Thursday, 18-12-2014 08:32:37 ]
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 50 வீத வாக்குகளை பெற முடியாத நிலைமை ஏற்பட்டால், இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவதற்கு முன்னர் மக்களுடன் வீதியில் இறங்கி போராட எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
[ Thursday, 18-12-2014 08:03:25 ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான விதுர விக்கிரமநாயக்கவும் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Thursday, 18-12-2014 08:02:09 ]
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீனை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 18-12-2014 07:55:09 ]
அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவின் மைத்துனரும், பத்தேகம அமைப்பாளருமான சட்டத்தரணி ஆனந்த அபேவிக்கிரம, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வந்துள்ளார்.
(3ம் இணைப்பு)
[ Thursday, 18-12-2014 07:28:10 ] []
இறுதியுத்தம் இடம்பெற்ற  முல்லைத்தீவு பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது.
[ Thursday, 18-12-2014 07:08:48 ]
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை அனுப்பிய குமரன் பத்மநாதனை தம்முடன் வைத்திருக்கும் ராஜபக்ஷவினர் தம்மை தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
[ Thursday, 18-12-2014 07:02:51 ]
வருகின்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதியாக கணபதிப்பிள்ளை மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 18-12-2014 06:52:40 ]
வேட்பாளரின் அனுமதியின்றி அவரது முன்னைய கருத்துக்களை, மற்றைய வேட்பாளரின் பிரச்சாரத்துக்கு விளம்பரமாகப் பயன்படுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Thursday, 18-12-2014 06:40:41 ]
முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக ரெியவருகிறது.
(2ம் இணைப்பு)
[ Thursday, 18-12-2014 06:37:08 ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் சிரேஷ்ட அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னேற்றம் காணப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து முஸ்லிம் காங்­கிரஸ் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக்சவுக்கே ஆத­ரவு வழங்கும் சாத்­தியம் உரு­வா­கி­யுள்­ளது.
[ Thursday, 18-12-2014 06:26:25 ]
பல் மருத்துவரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இருந்து 32 பற்களை பிடுங்குவதாக கூறியதாகவும் நல்ல பற்கள் இருப்பவர்கள் அவரது சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Thursday, 18-12-2014 06:23:07 ]
அரசாங்கத்தில் இருந்து தம்முடன் வெளியேற 20 அமைச்சர்கள் இணங்கியதாகவும், அவர்களில் தம்புள்ளையில் அழும் அமைச்சரும் ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 18-12-2014 05:37:25 ]
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள ஹோட்டல் புதிதாக இருந்தாலும் அதில் உள்ள சமையற்காரர்கள் பழையவர்கள் என்பதால் மக்கள் அதனை விரும்பவில்லை என்று பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
[ Thursday, 18-12-2014 05:29:26 ] []
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமக பல இடங்களின் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 18-12-2014 14:45:16 ] []
இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.