போத்துக்கல் காட்டுத் தீ: 59 பேர் பலி

Report Print Steephen Steephen in ஏனைய நாடுகள்

போத்துக்கல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் தீயணைப்பு படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போத்துக்கல் நாட்டின் கோயம்பிராவின் தென் கிழக்கில் 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெட்ரோகவ் கிரேன்டே என்ற பகுதியில் இருந்து வாகனங்களில் தப்பிச் செல்ல முயற்சித்த பலர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது எனவும் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீகளில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் என போத்துக்கல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் புகைக் காரணமாக ஏற்பட்ட மூச்சு திணறலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வீதியில் கார்களில் சென்ற 30 பேர் உயிரிழந்ததாக போத்துக்கல் வெளிவிவகார அமைச்சர் ஜேர்கே கோமஸ் தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்காலம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஸ்பெயின் தண்ணீர் தெளிக்கும் இரு விமானங்களை போத்துக்கல் அனுப்பியுள்ளது.

வீடுகள் பலவற்றை சேதப்படுத்தியிருக்கும் இந்த காட்டுத் தீ எப்படி பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

போத்துக்கல் நாட்டில் சில இடங்களில் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவுகிறது.

இதனால், வறட்டு மின்னல் தாக்கியதால், இந்த தீ பரவியிருக்கலாம் என பிரதமர் கோஸ்டா குறிப்பிட்டுள்ளார்.

Comments