அஸ்வின் மரணம் விபத்தல்ல.. திட்டமிட்ட கொலை?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கார் விபத்தில் கருகி உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று அதிகாலையில் சென்னை பட்டினம்பாக்கம் அருகில் பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதா காரில் செல்லும் போது திடீரென்று விபத்து ஏற்பட்டு இருவரும் எரிந்து சாம்பலானார்கள்.

கார் பந்தய வீரரான அஸ்வின், ஓராண்டிற்கு முன்னர்தான் நிவேதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சொகுசு காரில் எம்.ஆர்.சி. நகரில் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது கார் திடீரென்று தீப்பிடித்து பற்றி எரிந்தது.

இதில் காரில் இருந்து தப்ப முடியாத அஸ்வின் மற்றும் நிவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய நிலையிலேயே அவர்களது உடல் மீட்கப்பட்டது.

இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த விபத்து திட்டமிட்ட கொலையாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

கார் மோதிய விதம், தீப்பிடித்து எரிந்த நிலை உள்ளிட்டவற்றை சிலர் சந்தேகத்தோடே பார்க்கின்றனர். அஸ்வின் ஒரு கார் பந்தய வீரர் என்பதால் சாதாரணமாக சாலையில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழக்காமல்தான் செல்வார்.

அதுவும் மனைவியுடன் செல்லும் போது இன்னும் எச்சரிக்கை உணர்வுடன் செல்லும் அஸ்வினுக்கு விபத்து நடந்திருக்க வாய்பில்லை என்கிறார்கள் நண்பர்கள்.

சொகுசு காரில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஸ்வின் கார் தீப்பிடித்தது எப்படி?

அப்படியே தீப்பிடித்தாலும் அதில் தப்பி வருவதற்கான வழிகள் என்ன ஆனது? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை உறவினர்கள் அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.

இந்த கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருக்க, அவர் சென்ற பார்ட்டியில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியமான கேள்வி.

அஸ்வின் யார் கொடுத்த பார்ட்டியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்றும் அங்கு யார் யாருடன் என்னென்ன பேசினார் என்பது பற்றி எல்லாம் தீர விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்று அஸ்வினின் நண்பர்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Comments