புத்தாண்டு அன்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் விவாதம்

Report Print Vino in பாராளுமன்றம்
advertisement

கடந்த தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பன்று இடம்பெற்ற பாரிய அனர்த்தமான மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் வாரத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென மஹிந்த ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக விவாதத்தினை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் திகதி குறிப்பிடப்படவில்லை.

advertisement

Comments