அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.க எதிர்ப்பு என்பதை அறியவில்லை: அமரவீர

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

இலங்கையில் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியின் ராஜாங்க அமைச்சர்கள் இந்த அமைச்சரவை மாற்றங்களுக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக வெளியான தகவல் குறித்து தாம் அறியவில்லை என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிரச்சினை உள்ளது. எனினும் அமைச்சரவை மாற்றத்துக்கு அந்தக்கட்சிக்குள் எதிர்ப்புக்கள் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தநிலையில் தமக்கு எந்த அமைச்சை தந்தாலும் அதில் பணியாற்ற தயாராகவே உள்ளதாக அமரவீர கூறினார்.

Comments