கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது குறைவாக காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டி அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
திருக்கோவில் பகுதியில் உள்ள 120 ஆண்டு கால பழைமை வாய்ந்த ஆதார வைத்தியசாலையில் எந்த வித அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட வில்லை.
குறித்த வைத்தியசாலையானது மிகவும் பழைமை வாய்ந்த ஆதார வைத்தியசாலையாகவே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.