சந்திரிக்காவின் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

Report Print Ajith Ajith in அரசியல்
advertisement

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையிலான தேசியக்கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இந்த செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, கடந்த 3ஆம் திகதியன்று வெளியிடப்பட்டன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த பரிந்துரைகளில் உண்மை மற்றும் நீதி தொடர்பில் விடயங்கள் அடங்கியுள்ளன.

இவை, 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிவேற்றப்பட்ட யோசனைகளை பிரதிபலிக்கின்றன.

இதில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளடங்குகிறது.

இதனைதவிர,காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள், மற்றும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு போன்றவற்றுக்கான பரிந்துரைகளும் உள்ளடங்கியுள்ளன.

இந்த நிலையில் குறித்த அறிக்கையில் இலங்கையின் அனைத்து இனங்களுக்குமான நீதிக்குறித்த விடயங்களும் அடங்கியுள்ளன.

எனவே தம்மால் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கைய நடைமுறைப்படுத்த வேண்டும். என்று கண்காணிப்பகத்தின் ஆசிய நிலைப்பணிப்பாளர் பிரட் எடம்ஸ் கோரியுள்ளார்.

சர்வதேசம் என்றில்லாமல், உள்ளூரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் அடம்ஸ் கேட்டுள்ளார்.

advertisement

Comments