அடுத்து கைதாக உள்ள அரசியல் பிரபலம் யார்? உண்மையை கூறிய பிரதியமைச்சர்

Report Print Mawali Analan in அரசியல்

விமல் வீரவன்சவைத் தொடர்ந்து அடுத்து கைதாகப்போவது யார்..? என்பது தொடர்பில் எனக்கு மட்டும் அல்ல மகிந்த ராஜபக்சவிற்கும் நன்றாகத் தெரியும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

திருடர்களுக்கு நன்றாகவே தெரியும் தாம் கைதாகுவோம் என்ற விடயம். அந்தவகையில் விமல் கைது செய்யப்படுவார் என்பது மகிந்தவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனையே அவர் முன்னர் கூறினார்.

காரணம் அவர் ஊழல் திருட்டை செய்த ஒருவரே அவருடைய ஊழல் ஆவணம் மகிந்தவிடம் ஏற்கனவே சென்றிருந்தது. அவர் செய்த ஊழல் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்து கைதாகப்போவது யார்..? என்ற விடயமும் கூட மகிந்தவிற்கும், எமக்கும் நன்றாகவே தெரியும்.

இதற்காக நிதி மோசடி விசாரணை ஒன்றும் தேவையில்லை. சாதாரண கிராமவாசி ஒருவரும், கைக்கிளில் பயணம் செய்த ஒருவரும் இப்போது விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் சொந்தக்காரராக இருக்கின்றார்.

அதேபோன்று விமான பயிற்சி நிலையமும் கொண்டுள்ள ஒருவருக்கு மல்வானையில் காணிகளும் இருக்கின்றது. இதனைப் பார்க்கும் போது அவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக தெரியும் விடயமாகும்.

அவ்வாறான ஒரு நபரே அடுத்து கைதாக உள்ளார். அந்த வகையில் இப்போது நடக்கும் கைதுகள் மட்டுமல்ல அடுத்து நடக்கும் கைதுகளும் மகிந்த ராஜபக்சவிற்கு நன்றாகவே தெரிந்த விடயம்.

மேலும் விமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. இவை தேர்தலின் போது நல்லாட்சி கொடுத்த வாக்குறுதிகளாகும்.

விமல் தனது உறவினர்களுக்கு மாளிகைப்போன்று வீடுகளைக் கொடுத்துள்ளார். அவருக்கு பல வாகன திருட்டு குற்றச்சாட்டுகளும் இருக்கின்றது. அவர் திருட்டில் ஈடுபட்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம்.

அதே போன்று சிறைச்சாலைக்கு செல்கின்றவர்கள் சந்தோசமாக செல்கின்றார்கள். ஆனால் சிறை சென்றவுடன் பல்வேறு விதமான புதுப்புது நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.

இவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் முன்னரே மருத்துவ அறிக்கை ஒன்றினையும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மல்வானை காணிகள் தொடர்பான வழக்கில் பசில் ராஸபக்ச மீது குற்றச்சாட்டு இருக்கின்றது. மேலும் இவரின் கருத்து படி அனைத்துமே மகிந்தவின் திட்டமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments