தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் எது? சொல்கிறார் ஜனாதிபதி

Report Print Ajith Ajith in அரசியல்

தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் எது என்பதை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்று கூறியுள்ளார்.

மொரகஹகந்த நீர்த்தேகத்துக்கு முதலாவதாக தண்ணீர் பாய்ச்சும் நிகழ்வு ஜனாதிபதிதலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இதில் உரையாற்றியபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி. இது தொடர்பில்மேலும் தெரிவித்த அவர்,

“இன்று எனது வாழ்நாளில் அதிர்ஸ்டமான மற்றும் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்.

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற நாள்தானே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தநாள் என சிலர் கூறலாம்.

“ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது மகிழ்ச்சியாக இருந்ததை விட பாரிய பொறுப்புஎனக்கு இருந்தது.

“ஆனால், இன்று ரஜரட்ட மக்களின் பல தசாப்த கால கண்ணீர் கதையை முடிவுக்குக் கொண்டு வரநாம் இந்தப் பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள்ளோம்.

“இந்த திட்டத்தின் பிரதிபலன் இன்று எமக்கு கிடைத்துள்ளது.” என்று ஜனாதிபதிகூறியுள்ளார்.

Comments