கூவத்தூரில் 9 நாட்கள்! - எம்.எல்.ஏ. ஒருவரின் வாக்குமூலம்

Report Print Samy in அரசியல்
advertisement

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்குமிடையே ஏற்பட்ட பதவி மோதலில், எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ’கோல்டன் பே’ நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.

இவர்களில், மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் மட்டும் தாங்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மாறு வேடத்தில் வந்ததாகவும் கூறி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் கூட்டணியில் சேர்ந்துகொண்டார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதற்கு அடுத்து, கூவத்தூரைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், சசிகலா தரப்பு தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோரியும் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்படவிருந்த நிலையில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் தாமதித்து வந்தார்.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, கட்சி முன்மொழிந்ததன் பேரில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. ஒன்பது நாட்கள் வரை கூவத்தூர் நட்சத்திர விடுதியிலேயே தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பதவியேற்புக்காக ராஜ்பவன் விரைந்தனர்.

அவர்களில் தி.நகர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சத்யநாராயணனிடம் கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சத்யநாராயணன்,”கடவுள் மற்றும் மறைந்த அம்மாவின் புண்ணியத்தில் நாங்கள் அங்கே இன்றுவரை நிம்மதியாக இருந்தோம்.

ஒன்பது நாட்களும் சிறப்பாகப் போச்சு. நல்ல சாப்பாடு, சைவம் அசைவம் என இரண்டும் கொடுத்தார்கள்.

ஒரு ரூமுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தோம். எங்க வீட்டுல இருக்கிறவங்களும் அங்கே வந்து எங்களைப் பார்த்துட்டுப் போனாங்க.

எல்லா எம்.எல்.ஏக்களும் அவங்க வீட்டில் இருக்கிறவங்களைக் கூட்டிட்டு வந்தாங்க.

ஒரே ஒரு சின்னக் குறைதாங்க என்று நிறுத்தியவர், நாம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் மீண்டும் தொடர்ந்தார்.

குடிக்கிறதுக்கு பிஸ்லெரி, அக்வாஃபினா கிடைக்கலை சாதாரண தண்ணிதான் கிடைச்சது. மத்தபடி நாங்க எல்லோருமே ஹாப்பி.

இப்போ கூட பதவியேற்பு நிகழ்வை முடிச்சிட்டு நாங்க கூவத்தூர்தான் திரும்பவும் போறோம். சனிக்கிழமைதான் நாங்க திரும்புறதா இருக்கோம்! என்றார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

You may like this video

- Vikatan

advertisement

Comments