அரசாங்கம் கோரியுள்ள கால அவகாசத்தினை நீடிக்க கூடாது

Report Print Sumi in அரசியல்
advertisement

ஐ.நாவில் அரசாங்கம் கோரவுள்ள 2 வருட கால அவகாசத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் கால அவகாசம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில், எதற்காக கால அவகாசம் கோரப்படுகின்றது. கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறையே ஆகும்.

கால அவகாசம் நீடித்தால், தமிழ் மக்களின் பிரச்சினை இருந்தும் இல்லாமற் போன பிரச்சினையாக மாறிவிடும்.

தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கால அவகாசத்திற்கான சம்மதம் தெரிவிக்க முடியும்.

கால அவகாசத்திற்கான சம்மதம் தெரிவிக்க வேண்டிஏற்பட்டால் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்து அந்த நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டால், கால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

கால நீடிப்பு அங்கிகரிக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் மிக அருகில் இருந்து நிலைமைகளை கண்காணிக்க வேண்டும்.

மேலும் சம்பந்தனின் கருத்துக்களை பார்க்கும் போது, தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்கியிருக்கின்றார்கள் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அரசாங்கம் கோரும் கால அவகாசம் நீடிக்க கூடாது. அரசாங்கத்திற்கான கால அவகாசம் பற்றிய கருத்துக்கள் தமிழரசு கட்சியின் கருத்துக்களே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்ல.

தமிழரசு கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கால அவகாசம் பற்றி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துரையாடவுமில்லை. எமது கருத்துக்களை கேட்கவும் இல்லை.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் இராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

அரசாங்கம் தனது செயற்திட்டத்தின் கீழ் சகல கோரிக்கைகளையும் நிராகரித்து தான் விரும்பியபடி நடந்துகொண்டிருக்கின்றது.

advertisement

கால அவகாசங்களை நீடிக்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஐ.நா பொதுச் சபைக்கு விசாரணைகளை கையளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு தீர்மானங்களை உரியவர்களிடம் கையளிப்பதன் மூலமே விசாரணைகள் சாத்தியப்படும்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடன் கலந்துரையாடி கால அவகாசத்தினை நிராகரிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறும் தமிழரசு கட்சியின் தனிப்பட்ட கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக அமையாது. எனவே, கால அவகாசத்தினை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார்.

சம்பந்தன் மீது சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதில் எம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. ஆகவே, தமிழ்த் தேசியக் கூடட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டியவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிழையான வழியில் கொண்டு செல்பவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? எனச் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்துவதற்கான மூல காரண ஹர்த்தாவாக சம்பந்தன் இருக்கிறார் என்கிற நிலைமையை அவரே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, அவர் எதிர்வரும் காலங்களிலாவது சரியான பாதையில் கூட்டமைப்பை வழிநடாத்திச் செல்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஆகவே, இது தொடர்பில் திட்டவட்டமான முடிவுகளை நாங்கள் உரிய வேளையில் மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இந்த நிலையில் தமிழ்மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் பங்காளிக் கட்சிகளாகக் காணப்படுகின்றன.

குறித்த கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பதை மீளாய்வு செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளரொருவர் வினாவினார்.

இதற்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்கள் பேரவை என்பது ஒரு அரசியல் கட்சியல்ல. மாறாக ஒரு அழுத்தக் குழுவாக செயற்பட்டு வருகிறது என்பதும், அவ்வாறு தான் செயற்படும் எனவும் அதனுடைய இணைத் தலைமைகளால் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டு வருகிறது.

advertisement

தமிழ்மக்கள் நலன் சார்ந்து அரசாங்கமும், தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களும் எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைத் தமிழ்மக்கள் பேரவையூடாக அழுத்தமாகக் கொடுத்து வருகிறோம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதொரு அமைப்பாகும். இந்த அமைப்பு உருவாகி நீண்டகாலமான போதும் அந்த அமைப்பிற்குள் நிறைய முரண்பட்ட தன்மைகள் காணப்படுகின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவாறே நாங்கள் அதிலுள்ள தவறுகள் தொடர்பாக மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம். ஆனாலும், தமிழ்மக்களைப் பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற பரவலான அபிப்பிராயம் காணப்படுகின்றது.

தற்போது சம்பந்தன் மாத்திரம் ஏமாற்றப்படவில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்த இலங்கை அரசாங்கத்தால் தமிழ்மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணாமற் போனவர்கள் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தி வந்தனர். அந்த உண்ணாவிரதப் போராட்டம் வலுவடைந்த போது கொழும்பிலிருந்து வேறு வழியின்றி அரசாங்க அமைச்சர்கள் வவுனியா வருகை தந்து அவர்களுடன் பேச வேண்டியேற்பட்டது.

இந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்ததா? அல்லது தோல்வியில் முடிந்ததா? என்பது வேறு விடயம்.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பிலிருந்து அமைச்சர்களை வவுனியாவுக்கு வர வைத்தார்கள்.

தற்போது முல்லைத் தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தங்கள் காணிகளை விடுவிப்பதற்காக இரவு பகல் பாராது தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அந்தப் பகுதி மக்களைக் கொழும்பிற்கு வருகை தருமாறு கூறினார்கள். ஆனால், அவர்கள் நாங்கள் கொழும்பிற்கு வரமாட்டோம். அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நாடாத்துவதற்கு இங்கு வரட்டும் எனக் கூறியுள்ளனர்.

இன்று 17 நாட்களுக்கும் மேலாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிப் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

குறித்த போராட்டத்தைத் தீர்த்து வைப்பதற்காக அமைச்சர்கள் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை நிச்சயமாக உருவாகும். இதிலிருந்து கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தின் வலுவை உணர முடிகிறது.

தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ்மக்களின் நலன்கள் பால் நின்று போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் நலன்கள் பால் நின்று போராட்டங்களை இடைநிறுத்த முயற்சிப்பது அல்லது குழப்புவது, பிழையான வாக்குறுதிகளை வழங்குவது போன்றன தான் தற்போது இடம்பெற்று வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி நாங்கள் இதுவரை காலமும் இராஜதந்திர ரீதியாகப் போராடுகின்றோம்.

வெளிநாடுகளுடன் பேசுகின்றோம் எனக் கூறி வந்தாலும் தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வேதும் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

புதிய இணைப்பு - தமிழின் தோழன்

advertisement

Comments