​மக்களின் தேவைகள் வென்றெடுக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும்

Report Print Shalini in அரசியல்
advertisement

மக்களின் தேவைகள் வென்றெடுக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான மாநாட்டில் தலைமையேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

“இந்த கூட்டம் ஒரு சாராருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இன்னொரு சாராருக்கு மகிழ்சியாக அமைந்துள்ளது. எங்களோடு இருப்பது மக்கள் சக்தி, இளைஞர் சக்தி. அதனால் நாங்கள் எப்போதும் முன்னுக்கு தான் போய்க்கொண்டிருப்போம்.

நாங்கள் எங்களுடைய இலட்சியத்தை அடையும் வரை எங்களுடைய இயங்கு நிலைகள் முன்னோக்கியே சென்றுகொண்டிருக்கும். எமது பிரதேசம், எமது இளைஞர்கள், மீள்குடியேற்றம் ,தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்கள், வேலைவாய்ப்புக்கள் என தமிழ் மக்கள் மீளவும் ஒருநிலைக்கு வரும் வரையில் நாங்கள் போராடிக்கொண்டுதான் இருப்போம் .

நான் தமிழ் மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன், நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்களின் ஒரு பிரதிநிதியாகவே நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருக்கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு சிங்கள கட்சி என முன்பு சொல்லியிருக்கலாம் ஆனால் இன்று அது ஒரு நடுநிலைமை கட்சி. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிநடத்தலிலும் கண்காணிப்பிலும் தெளிவாக பயணிக்கின்றது.

நான் அக்கட்சியில் உங்களுடைய பிரதிநிதியாக இருந்து எங்களுடைய தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தெரிவித்து அதற்கான தீர்வினையும் மீள்குடியேற்றம் தொடர்பான மற்றும் யாப்புமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வலியுறுத்தியும் வருகின்றேன். எங்களுடைய அனைத்து சவால்களுக்கும் ஒரு தீர்வுகிடைக்கும் வரைநாம் போராடிக்கொண்டே இருப்போம், போராடுவோம்” என்றார்.

advertisement

Comments