வடக்கில் உள்ளவர்களுக்கு ஜனாதிபதியின் பெயர் தெரியாதாம்! கோத்தபாய

Report Print Kamel Kamel in அரசியல்

தாம் பதவியில் இருந்தக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தபோது காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக கூறியதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கோத்தபாயவுடன் கொழும்பில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்தியவேளையில் தமது மகனை இழந்த சிங்கள தந்தை ஒருவரும் வந்திருந்தார். அப்போது, இராணுவத்தை சேர்ந்த அவரது மகன் காணாமல் போனதாக குறித்த தந்தை முறையிட்டார்

இதன்போது அவரை பார்த்து நிச்சயமற்ற செய்தியை கூறாமல், உங்களது மகன் இறந்துவிட்டார். நீங்கள் நம்பத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டதாக நவிப்பிள்ளை தெரிவித்துள்ளார்;.

இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று தாம் கோத்தபாயவிடம் வலியுறுத்தியதாக நவநீதம் பிளை்ளை தெரிவித்துள்ளார்

இதேவேளை, தாம் நவவிப்பிள்ளையை சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, சிங்களவர்களும் கூட காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பதையே சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்ற விடயம் கூட தெரியாதபோது அவர்கள் எவ்வாறு தமது பிள்ளைகள் போரின் போது இராணுவ அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களிடம் சரணடைந்தமையை உறுதிப்படுத்தமுடியும் என்றும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments